திருச்சி:
முன்னாள் அதிமுக அமைச்சரும், தற்போதைய திமுக எம்எல்ஏவுமான செந்தில் பாலாஜி வீட்டில் காவல்துறை யினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
அதிமுக ஆட்சியின்போது, அவர் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது ஊழல் நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டில் சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

அதிமுகவில் முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. ஜெ மறைவுக்குப் பிறகு, டிடிவி தினகரன் அணியில் இருந்து வந்தார். பின்னர் அங்கிருந்து விலகி திமுகவில் இணைந்தார் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். தற்போது திமுக எம்எல்ஏவாக இருந்து வருகிறார்.
செந்தில் பாலாஜி போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. போக்குவரத்து துறையில் வேலை போட்டு தருவதாக கூறி 16 பேரிடம் ரூ 95 லட்சம் லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது.
இநத் நிலையில், கரூரில் இருந்து 26 கி.மீ. தொலைவில் உள்ள ராமேஸ்வரபட்டியில் உள்ள செந்தில்பாலாஜி யின் வீட்டில் சென்னை போலீஸ் விசாரணை வருகின்றனர். அதுபோல செந்தில் பாலாஜிக்கு சொந்தமான ஜவுளி ஏற்றுமதி நிறுவனத்திலும் அவரது தம்பி அசோக் வீட்டிலும் போலீஸார் சோதனை நடத்தி வருகின்றனர்/

செந்தில் பாலாஜி வீட்டில் இல்லாததால் அவரின் தந்தை வேலுச்சாமி, தாய் பழனியம்மாள் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். தகவலறிந்த செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் அவரது வீடு முன்பு குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]