சென்னை: திமுக மூத்த அமைச்சர்களான துரைமுருகன், கே.என்.நேரு மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைக்கு உத்தரவிட கோரி, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து மனு அளிக்க அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுகவினர் ஆளுநரை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இதனால் அரசியல் களம் பரபரப்பு அடைந்துள்ளது. இதற்கிடையில் கூட்டணி குழப்பங்களும் அதிகரித்து வருகின்றன. தேர்தலை முன்னிட்டு, அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றன. அதிமுக தரப்பில், எடப்பாடி பழனிச்சாமி, ஆளுநரை இன்று சந்தித்து பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழ்க சட்டமன்ற கூட்டத்தொடர் வரும் 20ந்தேதி தொடங்க உள்ளது. அன்றைய தினம் திமுகஅரசின் உரையை மரபுபடி ஆளுநர் வாசிக்க வேண்டும். அதை ஆளுநர் வாசிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில், எதிர்க்கட்சிதலைவர் எடப்பாடி பழனிச்சாமி இன்று ஆளுநரை சந்தித்து பேசுகிறார். அப்போது, திமுக மூத்த அமைச்சர்களான துரைமுருகன், கே.என்.நேரு மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் மீது விரைந்து விசாரணையைத் தொடங்க உத்தரவிடுமாறு மனு அளிக்க உள்ளதாக கூறப்படகிறது.
ஏற்கனவே எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரசாரத்தின்போது, திமுக அரசின் ஊழல் குறித்து கடுமையாக விமர்சித்து வருகிறார். மேலும், தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு மீது ரூ.1020 கோடிக்கு ஊழல் குற்றச்சாட்டு, திமுகவின் மற்றொரு மூத்த அமைச்சரான துரைமுருகன் மீதான ரூ.3000 கோடி ஊழல் குற்றச்சாட்டு மற்றும் திமுக அமைச்சர்கள் பலர் மீது உள்ள ஊழல் குற்றச்சாட்டுக்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துமாறு வலியுறுத்தி வருகிறார்.
ப்பாடி பழனிசாமி இன்று ஆளுநர் ஆர்.என். ரவியை நேரில் சந்தித்து திமுக அமைச்சர்கள் மீதான ஊழல் புகார் தொடர்பாக ஆதாரங்கள், புகார் மனுவை அளிக்க உள்ளார்.
தமிழக கவர்னர் ஆர்.என். ரவியை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று . காலை 11 மணி என நேரம் ஒதுக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. அதனால், இந்த சந்திப்பின்போது, தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும், போதை கலாச்சாரம், சட்டம்-ஒழுங்கு நிலவரம் மற்றும் திமுக அரசுக்கு எதிரான பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளிட்டவை அடங்கிய மனுவை வழங்குவார் என கூறப்படுகிறது.
உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த இரண்டு தினங்களாக தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது திருச்சி மோடி பொங்கல் விழாவை பாஜக கோலாகலமாக கொண்டாடியது. இதற்கிடையில், அமித்ஷாவை அதிமுக மூத்த நிர்வாகிகளில் ஒருவரான எஸ்.பி. வேலுமணி இரண்டு முறை தனியாக சந்தித்து பேசியிருந்தார். இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த பரபரப்புக்கு மத்தியில், இன்று கவர்னரை சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி சந்திப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
[youtube-feed feed=1]