நாடு முழுவதும் கொரோனா பரவல் தீவிரமாகி வருகிறது, குறிப்பாக குஜராத், உத்தர பிரதேசம், பீகார் உள்ளிட்ட வடமாநிலங்களில் கட்டுப்பாடின்றி கைமீறி சென்று கொண்டிருக்கிறது,

உத்தர பிரதேச மாநிலம் லக்னோ நகரின் கோமதி ஆற்றுப்படுகையில் உள்ள பைசகுண்ட் மயானத்தில் இரவு நேரங்களில் குவியல் குவியலாக பிணங்கள் எரியூட்டப்பட்டு வருகின்றன இது தொடர்பான வீடியோ வைரலானதை தொடர்ந்து கொரோனா கட்டுப்பாட்டில் மத்திய மாநில அரசுகள் செயலற்று நிற்பதை காட்டுவதாக உள்ளது.

இந்த சம்பவத்தை பத்திரிகையாளர் ஒருவர் படம் பிடித்து தனது சமூக தளத்தில் பதிவிட்டதுடன் இந்த வீடியோ செய்தியாகவும் வெளியானது தற்போது இது நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

https://twitter.com/JournoPrashant/status/1382592228959297538

இதனை தொடர்ந்து பைசகுண்ட் மயானம் உள்ள பகுதியை தகர ஷீட்டுகள் கொண்டு அடைக்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது, இதனால் அங்கு என்ன நடக்கிறது என்பது குறித்து யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.

அரசின் இந்த நடவடிக்கையால், குழம்பிப்போயிருக்கும் மக்கள், கும்பமேளாவுக்கு சென்ற தங்கள் உறவினர்கள் நிலை குறித்து மிகுந்த வேதனையில் இருக்கின்றனர்.

இந்த நிலையில் இனி மக்கள் அரசை மட்டுமே நம்பியிருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.