சென்னை,
ள்ளாட்சி தேர்தல் நடைபெற இருப்பதை தொடர்ந்து பெண்களுக்கான வார்டுகள் பிரிக்கும்பணி முடிவடைந்து அறிவிக்கப்பட்டு உள்ளது.
chennaicorp4jan2016
உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 50 சதவித இடஒதுக்கீடு என தமிழக அரசு சட்டம் கொண்டுவந்துள்ளதை தொடர்ந்து பெண்களுக்கான வார்டுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
ஏற்கனவே, ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி பெண்களுக்கான வார்டுகள் அறிவிக்கப்பட்டு விட்டன. தற்போது சென்னை மாநகராட்சியில் உள்ள வார்டுகளில் பெண்ளுக்கான வார்டு விவரம் அறிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னையில் மொத்தம் உள்ள 200 வார்டுகள் உள்ளது. அதில்  108 வார்டு கள் பெண்களுக்கு ஒதுக்கப் பட்டுள்ளது.
தாழ்த்தப் பட்டோருக்கு (பெண்கள்) 16 வார்டுகள்,  பெண்கள் (பொது) 92 வார்டுகள், தாழ்த்தப்பட்டோர் (பொது) 16 வார்டுகள் என மொத் தம் 124 வார்டுகள் ஒதுக்கப் பட்ள்ளடுது.  மீதமுள்ள 76 வார்டுகள் பொதுவானவை. அதில் ஆண்கள் அல்லது பெண்கள் போட்டியிடலாம்.
தாழ்த்தப்பட்டோர் பொதுப்பிரிவுக்கான வார்டுகள் :
வார்டு எண்: 19, 21, 29,37,45,46,47,53,57,71,72,73,117,143,157,188
தாழ்த்தப்பட்ட பெண்கள் பிரிவிற்கான வார்டுகள்:
 வார்டு எண்: 16,17,18,23,25,31,59,62,77,85,107,111,144,159,195, 200
பெண்கள் பொதுப்பிரிவிற்கான வார்டுகள்:
வார்டு எண்: 1,3,8,9,11,13,14,15,22,27,33,34,39,40,41,42,43,44,48,49,50,51,52,58,61,66,67,68,69,70,74,76,79,81,83,88,89,91, 93,94,95,96,99,100,101,102,103,  104,113 , 119,120,121,122,123,124,125,126,128,129,130,132,133,134,135, 139,147,149,151,152,153, 154,158,160,161,164,167,168,169,173,175,176,179,180,181,182,183,185,187,191,193,194,199
இந்த வார்டுகளை தவிர பிற வார்டுகள் (76 வார்டுகள்) அனைத்தும் பொதுப்பிரிவினருக்கு ஒதுக்கப்பட் டுள்ளது.
பொதுப்பிரிவில் ஆண் அல்லது பெண் போட்டியிடலாம்.