திருவனந்தபுரம்:

கேரளாவில் இரண்டு வவ்வால்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள நீர் தேக்கங்களில் வவ்வால்கள் அதிகளவில் வாழ்த்து வருகின்றனர்.

வவ்வால்களுக்கு கொரோனா தொற்று இருக்கிறதா என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) ஆய்வு நடத்தியது. கேரளா, இமாச்சலப் பிரதேசம், புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் உள்ள வவ்வால்களிடம் இருந்து ரத்த மாதிரிகளில் அவகைகளுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கர்நாடகா, சண்டிகர், குஜராத், ஒடிசா, பஞ்சாப் மற்றும் தெலுங்கானாவிலிருந்து வசித்து வரும் வவ்வால்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்றும் இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

முன்னதாக, வவ்வால்களிடம் நடத்தப்பட்ட டிரான்ஸ்கிரிப்ஷன் பாலிமரேஸ் சங்கிலி எதிர்வினை (RT-PCR) சோதனையில் அவைகளுக்கு நிபா வைரஸ்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து இந்த வவ்வால்கள் குறித்து விரிவான ஆய்வு நடத்தப்பட்டது. இதில் கேரளாவில் உள்ள் இரண்டு வவ்வால்களுக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து, அந்த பகுதியில் வசிக்கும் வவ்வால்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் சுகாதரத் துறை அறிவுரை வழங்கியுள்ளது.