சென்னை:
செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், மதுரை உள்பட தமிழக மாவட்டங்களில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்து வருகிறது.

தமிழகத்தில் நேற்று  3,756 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை   1,22,350 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்று 3,051 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை கொரோனாவில் இருந்து 74,167 பேர் குணமடைந்து வீடு திரும்பி யுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் இன்று ஒரே நாளில் 1,261 பேர் பாதிக்கப்பட்டனர்.
செங்கல்பட்டு மாவட்டம்:
செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரே நாளில் 90 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதாக மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இதன் காரணமாக  கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7,305 ஆக அதிகரித்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம்:
காஞ்சிபுரத்தில் இன்று 67 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால்  கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3,037 ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலையில்  சிகிச்சை பெறுவோர் – 1,822 பேர். இதுவரை நோய் குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 1,177. இதுவரை 38 பேர்உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம்:
திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 361 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5,868 ஆக அதிகரித்துள்ளது.
வேலூர் மாவட்டம்:
வேலூர் மாவட்டத்தில் இன்று புதிதாக  169 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு   2494 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் நேற்று மாலை நிலவரப்படி 2258 பேர் பாதிக்கப்பட்டிருந்த னர். 818 பேர் சிகிச்சை குணமாகி வீடு திரும்பிய நிலையில், 1434 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும்,  இதுவரை 6 பேர் பலியாகி உள்ளதாகவும்  தெரிவிக்கப்பட்டது.

மதுரை மாவட்டம்:
மதுரை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 310 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. நேற்று மாலை நிலவரப்படி, 5057 பேர் கொரோவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், 1160 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளதாகவும், 3811 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்பட்டது. இதுவரை 86 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர். இந்த நிலையில், இன்று மேலும் 310 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து பாதிபப்பு எண்ணிக்கை  5367 ஆக அதிகரித்துள்ளது.
திருவாரூர் மாவட்டம்:
திருவாரூர் மாவட்டத்தில் வட்டாட்சியர்உள்பட   6 வி.ஏ.ஓ.க்கள் மற்றும் பொதுமக்கள் உள்பட  24 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதாக மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். மாவட்டம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 368 ஆக அதிகரித்துள்ளது.
தருமபுரி மாவட்டம்
தருமபுரி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. நேற்று மாலை நிலவரப்படி, 156 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 69 பேர் சிகிச்சை குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 86 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம்: 
நெல்லை மாவட்டத்தில் இன்று 139 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. நேற்று மாலை நிலவரப்படி, கொரோனா  பாதித்தவர்கள் எண்ணிக்கை 1300 ஆக இருந்த நிலையில், 702 பேர் சிகிச்சை குணமடைந்து உள்ளதாகவும், 589 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை  9 பேர் கொரோனாவுக்கு பலியான நிலையில், இன்று மேலும் 139 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.