குவைத்:
குவைத் முழுவதும் உள்ள குடிமக்கள் மற்றும் வெளிநாட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்று பிரதமர் ஷேக் சபா அல் காலித் அல் சபா அறிவித்துள்ளார்.
குவைத்தில் உள்ள பல்வேறு அமைச்சகங்களுக்கு இடையேயான கூட்டத்தில் பேசிய பிரதமர், குவைத் முழுவதும் உள்ள குடிமக்கள் மற்றும் வெளிநாட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்றும், அனைவருக்கும் தடுப்பூசி பயன்படுத்துவது கட்டாயமில்லை என்று கூறியுள்ளார்.
அமெரிக்க மருந்து தயாரிக்கும் நிறுவனமான ஃபைசர் நிறுவனம் கொரோனா தடுப்பூசிகளை குவைத்திற்கு வழங்க உள்ளது. இந்த தடுப்பூசி இந்த மாதத்தில் குவைத்திற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குவைத் சுகாதாரத்துறை அமைச்சகம் முதல் கட்டத்தில் இரண்டு மில்லியன் தடுப்பூசிகளை பெறுவதற்காக ஃபைசர் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது இருப்பினும், மக்கள் தொகையில் பாதி பேர் தடுப்பூசி பெற தயங்குவதாக தெரிய வந்துள்ளது.