காத்மாண்டு:
நேபாளத்தில் ஒருவருக்கு கோரோனா வைரஸ் தாக்குதல் உள்ளது உறுதி செய்யப்பட்டு உள்ள நிலையில், மேலும் 2 பேர் பாதிக்கப்பட்டு இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ள மத்திய சுகாதாரத்துறை அறிவித்து உள்ளது.
உலக நாடுகளை பயமுறுத்தி வரும் கோரோனா வைரஸ் பாதிப்பு சீனாவில் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இந்த உயிர்க்கொல்லி வைரஸுக்கு இதுவரை 56 பேர் உயிரிழந்து உள்ளதாகவிம், 300-க்கும் மேற்பட்டோரின் நிலமை கவலைக்கிடமாக இருப்பதாகவும், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2ஆயிரமாக உயர்ந்துவிட்டது என்றும் என்று சீன மருத்துவ நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதே வேளையில் கோரோனா வைரஸ் உலக நாடுகளுக்கும் பரவி வருவதாக கூறப்படுகிறது. பிரான்ஸில் 2 பேரும் ஆஸ்திரேலியா (1), தாய்லாந்து (4), ஜப்பான் (2), தென் கொரியா (2), அமெரி்க்கா (2), வியட்நாம் (2), சிங்கப்பூர் (3), நேபாளம் (1), ஹாங்காங் (5), மாக்காவ் (2), தைவான் (3) ஆகியோர் பாதிக்கப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், இந்தியாவின் நேபாளத்திலும் ஒருவர் கோரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி உள்ளதாகவும், மேலும் 2 பேர் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகம் உள்ளதாகவும் இந்திய சுகாதாரத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. இதையடுத்து இந்திய எல்லையில் தீவிரமாக கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.