புதுடெல்லி:

ந்தியா தனது சோதனைக் கருவிகளில் 75 சதவீதத்தை உள்நாட்டு உற்பத்தியாளர்களிடமிருந்து வாங்க முடிவு செய்துள்ளது.

இதன் மூலம் கொரோனா சோதனைகளின் என்ணிக்கையை அதிகரிக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். கடந்த மே 19 அன்று, சோதனை செய்யப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை இரண்டாவது முறையாக 1 லட்சத்தை தாண்டியுள்ளதாக என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கையின்படி, ஜூன்-ஜூலை மாதங்களுக்குள் கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று தெரிய வந்துள்ளது. இந்நிலையில், கொரோனா சோதனை கருவிகளை உள்நாட்டு உற்பத்தியாளர்களிடம் இருந்து வாங்கும் முடிவு முக்கியமானதாகவே கருதப்படுகிறது. இந்த கருவிகளை பயன்படுத்தி, ஜூன் மாத இறுதிக்குள் தற்போதைய மாதிரிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக சோதிக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

இதுகுறித்து பேசிய கொரோனா நோய் கண்காணிப்பு, பரிசோதனை மற்றும் பராமரிப்பு குழு தலைவர் இருக்கும் மிஸ்ரா. ஏப்ரல் மாதத்தின் முதல் பதினைந்து நாட்களில், கொரோனா சோதனை கருவிகளை பெறுவதற்கு சிரமப்பட்டோம். எங்களுக்கு உதவுவதாக, ஆர்.என்.ஏ பிரித்தெடுக்கும் கருவிகள் மற்றும் வி.டி.எம் கருவிகளை உருவாக்கக்கூடிய அனைத்து நிறுவனங்களும் உறுதி அளித்துள்ளன. இதையடுத்து, 75 சதவீதத்திற்கும் அதிகமான கருவிகள், உள்நாட்டு உற்பத்தியாளர்களிடமிருந்து சப்ளை செய்யப்படுபவை என்றார்.

தற்போது ஆறு விடிஎம் சப்ளையர்களில் நான்கு பேரும், எட்டு ஆர்.என்.ஏ பிரித்தெடுத்தல் கிட் சப்ளையர்களில் ஐந்து பேரும் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் இடம் பெற்றுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆர்டி-பி.சி.ஆர் கருவிகளை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) அங்கீகரித்த 28 நிறுவனங்களில் 14 நிறுவனங்கள் இந்திய நிறுவனங்களாகும் என்பது குறிப்பிடத்தக்கது.