டெல்லி: கொரோனா வைரஸ் எளிதில் பரவும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 17வது இடத்தில் உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.
சீனாவை தவிர்த்து கொரோனா வைரஸ் வேகமாக பரவும் அபாயம் உள்ள 30 நாடுகளின் பட்டியலை ஜெர்மனியில் உள்ள ஹம்போல்ட் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வில் தாயலாந்து, ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகியன நாடுகளில் கொரோனா வேகமாக பரவும் அபாயம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆய்வு பட்டியலில் இந்தியா 17வது இடத்தில் இருக்கிறது. டெல்லி, மும்பை, கொல்கத்தா விமான நிலையங்களில் இருந்து கொரோனா வைரஸ் வேகமாக பரவக்கூடிய அபாயம் இருப்பதாக ஆய்வு தெரிவிக்கிறது.
தாய்லாந்து, ஜப்பான், தென் கொரியா, ஹாங்காங், தைவான், அமெரிக்கா, வியட்நாம், மலேசியா, சிங்கப்பூர் மற்றும் கம்போடியா ஆகிய நாடுகள் கொரோனா வைரஸ் வேகமாக பரவும் அபாயம் உள்ள நாடுகளின் பட்டியலில் முதல் 10 இடங்களை பிடித்து இருக்கின்றன.
இந்தியாவில் உள்ள விமான நிலையங்களில், டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் மூலம் கொரோனா வைரஸ் எளிதில் பரவ அதிக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 0.066 சதவீதம் வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மும்பை (0,034%), கொல்கத்தா(0,020%), பெங்களூரு0,018%),சென்னை(0,015%) விமான நிலையங்களிலும் வைரஸ் பரவ வாய்ப்பு இருப்பதாக அறியப்பட்டு இருக்கிறது. இதையடுத்து, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, சென்னை, ஹைதராபாத் மற்றும் கொச்சி ஆகிய விமான நிலையங்கள் உள்ளன.
சீனாவில் கொரோனா பரவ 85 சதவீதம் வாய்ப்புகள் உள்ளதாக ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டது. தாய்லாந்து, ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளிலும் இந்த தாக்கம் அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.