சென்னை:
தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக தொற்று பாதிக்கப்பட்டுள்ளோர் விவரம் வெளியாகி வருகிறது.
செங்கல்பட்டு, காஞ்சிபுரம் திருவள்ளூர், வேலூர், மதுரை, திருவண்ணாமலை, திருவாரூர், கிருஷ்ணகிரி உள்பட மாவட்டங்களில் கொரோனா தொற்று நிலவரம் வெளியாகி உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம்:
அதன்படி செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 225 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன் காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4876ஆக உயர்ந்துள்ளது இதுவரை 68 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதைய நிலையில் 2,119 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 2,463பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்
காஞ்சிபுரம் மாவட்டம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று மேலும் 113 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 1,693 ஆக அதிகரித்துள்ளது. நேற்றைய நிலவரப்படி அங்கு கொரோனா பாதிப்பு 1580 ஆக இருந்தது. அதில், நேற்றுவரை 733 பேர் குணமடைந்துள்ளனர். சிகிச்சையில் 829 பேர் இருந்த நிலையில் தற்போது 942 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 18 பேர் பலியாகி உள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 7 நகராட்சி மற்றும் 11 பேரூராட்சிகளிலும் 55 ஊராட்சிகள் உள்ளடங்கும். அதில் காஞ்சிபுரம் மாவட்டங்களில் சில பகுதிகளும் உள்ளடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
திருவள்ளூர் மாவட்டம்:
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் 134 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதனால், மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3380 ஆக உயர்வு.
வேலூர் மாவட்டம்
வேலூர் மாவட்டத்தில்இன்று மேலும் 110 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1123 ஆக உயர்ந்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 127 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. அவர்களில் 8 மாத குழந்தை உள்பட 39 பெண்கள் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1625 ஆக உயர்ந்துள்ளது. நேற்றைய நிலவரப்படி மாவட்டத்தில் 70 பேருக்கு பாதிப்பு இருப்பது உறுதியானது. இதனால் மொத்தம் எண்ணிக்கை 1498 ஆக அதிகரித்திருந்தது. இதுவரை 573 பேர் குணமடைந்துள்ளனர். ல் நேற்று வரை 916 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது 1,043 ஆக அதிகரித்துள்ளது. திருவண்ணாமலையில் கொரோனாவிற்கு இதுவரை 9 பேர் பலியாகி உள்ளனர்.
மதுரை மாவட்டம்
மதுரை மாவட்டத்தில் இன்று மேலும் மேலும் 190 பேருக்கு கொரோனா உறுதி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 1639 ஆக உயர்வு
திருவாரூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 60 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி * பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 400 ஆக உயர்ந்துள்ளது. நன்னிலம் மதுவிலக்கு காவல்துறை பிரிவில் 4 பெண் காவலர்கள் உட்பட 5 காவலர்களுக்கு கொரோனா உறுகி உள்ளது. மேலும், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் உட்பட ஒரே நாளில் 60 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.
விருதுநகரில் இன்று மேலும் 58 பேருக்கு கொரோனா பாதிப்பு. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 210ஆக உயர்ந்துள்ளது.