டெல்லி:
கொரோனா பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் கடந்த 24 மணி நேரத்தில் 3 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 22,771  பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை  6,48,315  ஆக உயர்ந்துள்ளது.
அந்தமான் நிக்கோபார்  யூனியன் பிரதேசத்தில், இதுவரை 116 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்த நிலையில்,  62 பேர் குணமடைந்துள்ளனர். 54 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்கு கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பாதிப்பு ஏதும் இல்லாத  நிலையில், தற்போது 3 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 119 ஆக உயர்ந்துள்ளது.
அங்கு  இன்றுவரை இறப்புகள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை.

[youtube-feed feed=1]