டெல்லி:

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், பொருளாதார இழப்புகள் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில், ஐசிஐசிஐ வங்கி  நிர்வாகமும், தங்களது வங்கி செயல்பட்டு வரும் கட்டிடங்களின் உரிமை யாளர்கள், 3 மாதம் வாடகையை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது.

சமீபத்தில் இந்திய தேசிய உணவக சங்கம் (என்.ஆர்.ஐ.ஐ), நி  உரிமையாளர்களுக்கு, கொரோனா ஊரடங்கு முடியும் வரை அல்லது ஜூன் மாதம்வரை வாடகைகளை தள்ளுபடி செய்யுமாறு கடிதம் எழுதியிருந்தது. இந்த நிலையில், ஐசிஐசிஐ வங்கியும் வாடகை தள்ளுபடி செய்ய கோரிக்கை விடுத்துள்ளது.

இதற்கிடையில்,  இந்தியாவின் மென்பொருள் தொழில்நுட்ப பூங்காக்களில் இயங்கும் ஐ.டி மற்றும் ஐ.டி.க்கள் செலுத்தும் வாடகையை ஜூன் வரை தள்ளுபடி செய்வதாக மத்திய அரசு நேற்று அறிவித்து உள்ளது.

மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பதிவிட்டுள்ள டிவீட்டில், “இந்தியா முழுவதும் 60 எஸ்.டி.பி.ஐ மையங்களில் இருந்து இயங்கும் ஐ.டி பிரிவுகள் / தொடக்க நிறுவனங்கள் 01.03.2020 முதல் 30.06.2020 வரையிலான காலகட்டத்தில் வாடகை செலுத்துவதில் இருந்து தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. இது 3000 நேரடி வேலைகளை ஆதரிக்கும் கிட்டத்தட்ட 200 சிறு மற்றும் நடுத்தர ஐடி / ஐடிஎஸ் பிரிவுகளுக்கு பயனளிக்கும் ” என்று தெரிவித்து உள்ளார்.

இந்த நிலையில்தான்   முழுவதும் ஏராளமான கிளைகளையும், ஏடிஎம் களையும் அமைத்துள்ள ஐசிஐசிஐ வங்கி  தங்களுக்கும் 3 மாதம் வாடகையை தள்ளுபடி செய்ய வேண்டும் என நில உரிமையாளர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளது.

கடந்த  2019 ஆண்டு வங்கி  அறிக்கையின்படி, ஐசிஐ சிஐ வங்கிக்கு நாடு முழுவதுழம்,   4,874 கிளைகளும், 14,987 ஏடிஎம்களும் உள்ளது.    இந்த கிளைகள் மற்றும் ஏடிஎம் இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்கள் பெரும்பாலானவை வாடகை கட்டிடங்களில் இயங்கி வருகிறது. இதற்காக மாதம்தோறும் கோடிக்கணக்கான ரூபாய் செலுத்தி வருகிறது.

கொரோனா பரவல் தடுப்பு காரணமாக கடந்த மாதம் 24ந்தேதி முதல் மே 3ந்தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளதால், தொழ்ல்நிறுவனங்கள் முடங்கி உள்ளன. வங்கிகளின் சேவையும் பெருமளவில் குறைந்துள்ளன.

இந்த நிலையில், லாக்டவுன் காலத்தில், பல நிறுவனங்கள் வாடகை தள்ளுபடி கோரிக்கை விடுத்து வருகின்றன. அதுபோல ஐசிசிஐ வங்கியும் 3 மாதம் வாடகையை தள்ளுபடி செய்யுமாறு கட்டிட உரிமையாளகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

இதுபோல,  கொரோனா வைரஸ் நெருக்கடியால் மூடப்பட்டிருக்கும் நேரத்தில் ‘ஃபோர்ஸ் மேஜூர்’ பிரிவின் கீழ் வாடகை தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்று பி.வி.ஆர், ஐனாக்ஸ் லீஷர், சினிபோலிஸ் இந்தியா, மற்றும் கார்னிவல் சினிமாஸ் உள்ளிட்ட மல்டிபிளக்ஸ் பிளேயர்கள் நில உரிமையாளர்களுக்கும் மால் உரிமையாளர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளனர்.