சிம்லா: கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால்,  இமாச்சலப்பிரதேசத்தின் 4 மாவட்டங்களில் ஜனவரி 5ந்தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக மாநிலஅரசு அறிவித்து உள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் ஓரளவு கட்டுக்குள் உள்ள நிலையில், இமாச்சல பிரதேசத்தின் சில மாவட்டங்களில் தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து ஆய்வு செய்த மாநில அரசு,  மாநிலத்தின் நான்கு மாவட்டங்களில் இரவு ஊரடங்கு உத்தரவை ஜனவரி 5ந்தேதி வரை நீட்டிக்க முடிவு செய்து அறிவித்து உள்ளது.

அதன்படி,  சிம்லா, குலு, மண்டி மற்றும் காங்க்ரா ஆகிய 4 மாவட்டங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை என டிசம்பர் 15ந்தேதி முதல் ஜனவரி 5ந்தேதி வரை அமல்படுத்தப்பட்டு உள்ளது.

மேலும்,   அரசியல் பேரணிகள், பொது குறை தீர்க்கும் கூட்டங்கள் போன்றவற்றிக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும், 200 க்கும் மேற்பட்ட மக்கள் வெளியில் ஒன்றுகூட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.