காராஷ்டிர மாநிலம் நாசிக் நகரில் ரூபாய் நோட்டுக்களை அச்சடிக்கும் மத்திய அரசாங்கத்தின் அச்சகம் உள்ளது.

பலத்த பாதுகாப்புடன் திகழும் இந்த அச்சகத்தில் கொரோனா வைரஸ் நுழைந்து விட்டது.

இந்த வளாகத்தில் ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும் அச்சகம் ( CURRENCY NOTE PRESS) தவிர, பாதுகாப்பு அச்சகமும் ( INDIA SECURITY PRESS) உள்ளன.

‘கரன்சி’ அச்சகத்தில் ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்படுகின்றன.

பாதுகாப்பு அச்சகத்தில், ரெவின்யூ ஸ்டாம்ப், முத்திரை தாள்கள், பாஸ்போர்ட், விசா போன்றவை அச்சாகின்றன.

இரண்டு அச்சகங்களிலும் சுமார் 4 ஆயிரம் நிரந்தர ஊழியர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். அவர்களில் 40 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளதால், இன்று முதல் ( திங்கள்கிழமை) நான்கு நாட்கள் இரண்டு அச்சகங்களும் மூடப்படுகிறது.

இந்த நான்கு நாட்களில் அச்சடிக்கப்பட வேண்டிய 7 கோடி நோட்டுகளை , ஞாயிற்றுக்கிழமைகளில் கூடுதலாக வேலை பார்த்து அச்சடிக்க நாசிக் அச்சக நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

-பா.பாரதி