இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 396-ஆக உயர்வு

Must read

டெல்லி: 
ந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 396-ஆக அதிகரித்துள்ளதாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நேற்று மட்டும் குஜராஜ், பீகார் மற்றும் மகாராஷ்டிராவில் தலா ஒருவர் உய்யிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) வெளியிட்டுள்ள அறிக்கையின் பிடி, “இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்காலாம் என்ற சந்தேகத்தின் பேரில் நடந்தப்பட்ட சோதனையில் மொத்தம் 396 நபர்களுக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி படுத்தப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி 17 ஆயிரத்து 237 நபர்களிடமிருந்து 18 ஆயிரத்து 127 மாதிரிகள் இதுவரை பரிசோதிக்கப்பட்டுள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் கூற்றுப்படி, செயலில் உள்ள கொரோனா பாதிப்புக்குல்லானவர்களில் 24 பேர் குணமாகிவிட்டனர் என்றும், ஏழு பேர் உயிரிழந்து விட்டனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில், மூன்று வெளிநாட்டினர் உட்பட 67 பேருக்கு கொரோனா வைரஸ் உள்ளதாக தெரிய வந்துள்ளது. கேரளாவில் ஏழு வெளிநாட்டினர் உட்பட 52 பேருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதாகவும் சுகாதார துறை அமைச்சக தகவல்கள் தெரிவிக்கின்றன. டெல்லியில் 29 பேருக்கும், உத்தரபிரதேசத்தில் 27 பேருக்கும் இந்த வைரஸ் பாதிப்பு உள்ளது.

தெலுங்கானாவில் 11 வெளிநாட்டினர் உட்பட 22 பேர் ஹரியானாவில், 21 பேர், கர்நாடகாவில் 26 பேர், பஞ்சாபில் 21 பேருக்கும், குஜராத்தில் 18 பேர், லடாக்கில் 13 பேர், தமிழகத்தில் 7 பேர் என அனைவரும் வைரஸ் பாதித்துள்ளனர்.

இதே போன்று சண்டிகர் மற்றும் ஆந்திராவில் தலா ஐந்து பேர், மத்தியப் பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், மேற்கு வங்கம் தலா நான்கு பேருக்கும் வைரஸ் பாதிப்பு உள்ளதாக தெரிய வந்துள்ளது.

நாடு முழுவதும் விமான நிலையங்களில் இதுவரை மொத்தம் 15,17,327 பயணிகளை சோதனை செய்துள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், டெல்லி, கர்நாடகா, பஞ்சாப், மகாராஷ்டிரா, பீகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் உள்ளிட்ட பல மாநிலங்களில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் சுகாதார துறை அமைசகம் தெரிவித்துள்ளது.

More articles

Latest article