ஈரோடு:

ஞ்சள் நகரமான ஈரோட்டில், சாலைகளில் மஞ்சள் நீர் ஊற்றி கொரோனா தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

கிருமி நாசினியான மஞ்சள், உடலுக்கு வலு சேர்க்கும் மருந்துகளில் ஒன்று. நமது நாட்டு மக்களின் அன்றாட உணவில் மஞ்சள் இன்றியமையாததாகி உள்ளது.  உலக மஞ்சள் உற்பத்தியில் 91 சதவீதம் இந்தியாவில்தான் விளைகிறது. இதில் 30 சதவிகிதத்துக்கு மேலான மஞ்சள் ஈரோடு மாவட்டத்தில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது.

உலக சந்தையில் ஈரோடுமஞ்சளுக்கு தனி மவுசே உண்டு… ஈரோடு மஞ்சள் புவிசார் குறியீடும் பெற்றுள்ளது.

தற்போது உலக நாடுகளில் பரவி வரும் கொரோனா தாக்கத்தை தடுக்க மஞ்சள் அதிக அளவு உபயோகப்படுத்த வேண்டும் என்றும், வீட்டின் வாசல்களில் மஞ்சள் தண்ணீர் தெளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

கிருமி நாசினியான மஞ்சள் கலந்த நீர் வீடுகளில் தெளித்தால், வைரஸ் தொற்று பரவலை தடுக்கலாம் என்று சித்த வைத்தியர்களும் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், ஈரோட்டில், தனியார் தண்ணீர் லாரி ஒன்றில், மஞ்சள் கலந்த நீர் சேமித்து, மாவட்டத்தின் முக்கிய சாலைகளில், மஞ்சள் நீர் தெளிக்கப்பட்டது…

கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கையாக இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது…