பெய்ஜிங்: சீனாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வந்த டாக்டரும் அதே வைரஸ் தாக்கி பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சீனாவில் கொரோனா வைரஸ் என்ற தொற்று நோய் வெகு வேகமாக பரவி வருகிறது.இந்த வைரஸ் நோய் தாக்கி இதுவரை 41 பேர் பலியாகி இருக்கின்றனர். 237 பேரின் நிலைமைக் கவலைக்கிடமாக உள்ளது.
கொரோனா வைரஸ் பரவிய முதல் நகரமான வுஹான் நகரம் முற்றிலும் முடங்கியிருக்கிறது. மற்ற பகுதிகளுக்கு செல்லவோ அல்லது அங்கிருந்து இங்கு வரவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள பலருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஸின்ஹுவா மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் வுடோங். வயது 62. அவருக்கு கடந்த வாரமே கொரோனா வைரஸ் தாக்கியது. அதற்கான சிகிச்சையும் அளிக்கப்பட்டநிலையில் 9 நாள் போராடியும் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.
சீன மருத்துவத் துறையில் முதல் உயிரிழப்பாக இது கருதப்படுகிறது. இந்த வைரசுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.