சென்னை:
மிழகம் முழுவதும் கொரோனா விதியை மீறிவர்களிடம் இருந்து ரூ.3.44 கோடி அபராதமாக வசூல் செய்யப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

தற்போது ஒமைக்ரான் மற்றும் கொரோனா தொற்று அதிவேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு விதிமுறைகளை வகுத்து நடைமுறை படுத்தி வருகிறது. இதனால் பொது இடங்களில் அதிக அளவில் பொதுமக்கள் கூடுவதற்கு தமிழக அரசு தடைவிதித்து உள்ளது. அதுபோல் முக கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வருபவர்களுக்கு ரூ.200 அபராதமும், பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவர்களுக்கு ரூ.500 அபராதமும் விதிக்க மாவட்ட நிர்வாகம் உத்தர விட்டுள்ளது.

இதையடுத்து பொது இடங்களுக்கு முககவசம் அணியாமல் வருபர்கள் மீதும், சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்கள் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அபராதம் வசூலித்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் கொரோனா விதியை மீறிவர்களிடம் இருந்து ரூ.3.44 கோடி அபராதமாக வசூல் செய்யப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து காவல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முழுவதும் முககவசம் அணியாமல் சென்றவர்களிடம் இருந்து அபராதமாக 3.44 கோடி ரூபாயும், சமூக இடைவெளியை பின்பற்றாத 1910 பேர் மீது வழக்கு பட்டு செய்யப்பட்டுள்ளது என்றும், பொது இடங்களில் கூடிய குற்றத்திற்காக 1552 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.