மும்பை:

ந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 169ஆக உயர்ந்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகநாடுகளை அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் சுமார், 2 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 8ஆயிரம் பேரின் உயிரை பலி வாங்கி உள்ளது. இந்தியாவிலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் மொத்த கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை 169 ஆக உயர்ந்துள்ளது.  அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 47 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

அதுபோல கர்நாடக மாநிலத்தின் குடகு மாவட்டத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அங்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.

உ.பி.. மாநிலத்தில் Lakhimpur Kheri பகுதியில் மேலும் 2 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.

நேற்று 151 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் மேலும் 15 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களில் 141 இந்தியர்கள், 25 பேர் வெளிநாட்டினர்.

மொத்தத்தில் நாடு முழுவதும் கொரோனா பாதிப்புக்குள்ளானோர் எண்ணிக்கை 169 ஆக உயர்ந்துள்ளது.