கொல்கத்தா
கொரோனாவால் இறந்த திருணாமுல் வேட்பாளர் காஜல் சின்ஹாவின் மனைவி தேர்தல் ஆணைய அதிகாரி மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.
கொரோனா தொற்றின் இரண்டாம் அலையால் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஐந்து மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் காரணமாக கொரோனா தொற்று மேலும் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதுவரை தமிழகம், புதுவை, கேரளா, அசாம் ஆகிய 4 மாநிலங்களில் தேர்தல் நடந்து முடிவடைந்துள்ளன.
மேற்கு வங்க மாநிலத்தில் தற்போது சட்டப்பேரவை தேர்தல் நடந்து வருகிறது. எட்டு கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்தலின் வாக்குகள் மே மாதம் 2 ஆம் தேதி எண்ணப்படுகிறது. தற்போது கொரொனா அதிக அளவில் பரவி வருவதால் இந்த தேர்தல்களை ஒரே கட்டமாக நடத்தப் பலரும் வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் தேர்தல் ஆணைய,ம் அதற்கு மறுத்து விட்டது.
இந்நிலையில் மேற்கு வங்க மாநிலம் திருணாமுல் காங்கிரஸ் கட்சியின் கார்தா தொகுதி வேட்பாளர் கடந்த 25 ஆம் தேதி அன்று கொரோனா தாக்குதலால் மரணம் அடைந்தார். இதையொட்டி அவர் மனைவி தேர்தல் ஆணைய அதிகாரி சுதீப் ஜெயின் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.
இது குறித்து திருணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டெரெக் ஓ பிரெயின் காஜல் சின்ஹாவின் மனைவி தேர்தல் அதிகாரி மீது குற்ற நடவடிக்கைகளின் கீழ் வராமல் கொலை செய்துள்ளதாக வழக்கு தொடர்ந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.