ஜெனிவா: கொரோனா தடுப்பு மருந்தை கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டுமென்று எந்த நாடும் தனது குடிமக்களை கட்டாயப்படுத்தாது என்று தான் நினைப்பதாக, உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

“எந்த நாடும், கொரோனா தடுப்பு மருந்தை எடுத்துக்கொள்வது கட்டாயம் என்று தன் மக்களுக்கு கட்டளையிடும் என நாங்கள் நம்பவில்லை.

சில நாடுகளில் சூழல்களைப் பொறுத்து, இந்த தடுப்பு மருந்து விஷயத்தில் சில கட்டாயமான நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்று நம்புகிறோம்” என்றுள்ளார் அந்த அமைப்பின் இயக்குநர் கேட் ஓ பிரைன்.

கொரோனா தடுப்பு மருந்திற்கு, சில நாடுகள் அவசரகால அனுமதியளித்துள்ள நிலையில், பல நாடுகளில், விரைவில் நடைமுறைக்கு கொண்டுவரும் முயற்சிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.