பெங்களூரு: கர்நாடகாவில் வரும் ஜனவரி 11ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று அம்மாநில அமைச்சர் சுதாகர் தெரிவித்து உள்ளார்.
கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு 10 லட்சத்தை நெருங்குகிறது. பலி எண்ணிக்கை 12 ஆயிரத்து 124 ஆக அதிகரித்து உள்ளது. இந் நிலையில் இது குறித்து கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் கே.சுதாகர் கூறியதாவது:
கர்நாடகாவுக்கு ஒரு பெரிய நல்ல செய்தி மத்திய சுகாதார அமைச்சகத்திடம் இருந்து தகவல் கிடைத்துள்ளது. கொரோனாவுக்கு எதிராக 13,90,000 தடுப்பூசி டோஸ்கள் ஒன்று அல்லது இரண்டு நாட்களில் கர்நாடகா வரும்.
திங்கள்கிழமை முதல் முதல் பயனாளிகளுக்கு வழங்கப்படும். நம் அனைவருக்கும் பெரிய மகிழ்ச்சியான செய்தி என்று கூறினார்.