இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனை!

Must read


லண்டன்: உலகம் முழுவதும் சுமார் 1.5 கோடிக்கும் மேற்பட்டவர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கான தடுப்பூசி பரிசோதனை தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலகம் முழுவதும் கொரோனா தடுப்பு மருந்துகள் தொடர்பாக பலவிதமான பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன. அவற்றில், குறிப்பிடத்தக்கவை இறுதிகட்டத்தை எட்டியுள்ளன.
தற்போதைய நிலையில், உலகளவில் 3 பரிசோதனைகள் மட்டுமே இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. ஆக்ஸ்போர்டு பல்கலையும் ஆஸ்ட்ராஸெனகா என்ற மருந்து நிறுவனமும் இணைந்து நடத்தும் பரிசோதனை அவற்றுள் முதன்மையானதாக கருதப்படுகிறது.
அடுத்ததாக, சீன மருந்து நிறுவனமான சினோவாக் பையோடெக் தயாரித்துள்ள தடுப்பு மருந்து ப‍ரிசோதனை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. மேலும், மாடர்னா இன்க் என்ற நிறுவனத்தின் தடுப்பு மருந்து பரிசோதனையும் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
 

More articles

Latest article