சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் வருகிற 8ஆம் தேதி தடுப்பூசி ஒத்திகை நடத்தப்படும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இலவச கொரோனோ தடுப்பூசி செலுத்துவதற்காக 8881 மையம் மற்றும் 6 லட்சம் முன்கள பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். தமிழகத்தில் 2ந்தேதி சென்னை, திருவள்ளூர், கோவை, நீலகிரி, நெல்லை மா 11 இடங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெற்றது. இந்த நிலையில், வரும் 8ந்தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுஉள்ளது.
சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று, சென்னை பெரியமேட்டில் உள்ள மத்திய அரசின் மருந்து சேமிப்பு கிடங்கில்,ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தவர், சென்னையில் உள்ள மத்திய அரசின் மருந்து சேமிப்பு கிடங்கில், 2 கோடி தடுப்பூசிகள் பதப்படுத்தப்படும் என்று கூறியவர், கொரோனா தடுப்பூசி செலுத்த ஏதுவாக 33 லட்சம் ஊசிகள் மாவட்ட வாரியாக அனுப்பி வைக்கப்பட இருப்பதாகவும் தெரிவித்தார்.
முதற்கட்டமாக தமிழகத்தில் 6 லட்சம் முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்றும், ஒரு மையத்தில் நாளொன்றுக்கு 100 பேருக்கு மட்டும் தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது/ 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும்.
முதலில் சுகாதார பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் அதன்பிறகு முதியவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும். மாநிலம் முழுவதும் 51 இடங்களில் ராட்சத தடுப்பூசி சேமிப்பு அறைகள் அமைக்கப்பட்டுள்ளது என்றார்.