டெல்லி: நாடு முழுவதும் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் அறிவித்துள்ளார்.
உலக பொருளாதாரத்தை புரட்டிப்போட்டுள்ள கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தயாரிக்கப்பட்டுள்ள தடுப்பூசிகள் தற்போது பல நாடுகளில் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. இந்தியாவில் கொரோனா தடுப்பூசியை 6 நிறுவனங்கள் தயாரித்து வருகின்றன. அதன் இறுதிக்கட்ட சோதனைகள் முடிவடைந்து, மத்தியஅரசின் ஒப்புதலுக்காக காத்திருக்கின்றன. அதன்படி, சீரம் இன்ஸ்டிடியூட் தயாரித்துள்ள கோவாக்சின் , பாரத் பயோடெக் மற்றும் பிஃபிஸர் நிறுவன தடுப்பூசிகளுக்கும் ஒப்புதல் கிடைத்ததுடன் மக்களுக்கு செலுத்த தயாராக உள்ளன.
இதையடுத்து, தடுப்பூசிகள் போடப்படுவதற்கான நடவடிக்கைகளை மத்தியஅரசு தொடங்கி உள்ளது. இன்று நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெற்று வருகின்றன.
தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு இலவசமாக போடப்படும் என தமிழகம் உள்பட சில மாநிலங்கள் அறிவித்து உள்ளன. இதனால், தடுப்பூசிகளுக்கு பணம் வசூலிக்கப்படும் என்ற அச்சமும் மக்களிடையே எழுந்தது.
இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், கொரோனா தடுப்பூசி, டெல்லி மட்டுமின்றி நாடு முழுவதும் அனைவருக்கும் இலவசமாக போடப்படும் என்று தெரிவித்தார்.
டெல்லியில் கொரோன தடுப்பு மருந்து ஒத்திகையை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஹர்ஷ் வர்தன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, இந்த தகவலை தெரிவித்தார். மேலும், கொரோனா தடுப்பூசி தொடர்பாக திட்டமிட்டு பரப்பப்படும் வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என்று தெரிவித்தவர், கொரோனா தடுப்பு மருந்தின் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் உறுதிப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் கூறினார்.
ஏற்கனவே போலியோ நோய்த்தடுப்பு மருந்துகளின் போது பல்வேறு வகையான வதந்திகள் பரவின, ஆனால் மக்கள் தடுப்பூசி எடுத்துக்கொண்டனர் & இந்தியா இப்போது போலியோ இல்லாத நாடாக உருவெடுத்துள்ளது என்பதை சுட்டிக்காட்டியவர், தடுப்பூசிக்கான வழிகாட்டுதல்களின்படி இன்று அனைத்து மாநிலங்களிலும் யூனியன் பிரதேசங்களிலும் கொரோனா ஒத்திகை நடத்தப்பட்டு வருகிறது. உண்மையான தடுப்பூசி மட்டுமின்றி, பயிற்சியின் போது ஒவ்வொரு நடைமுறையும் பின்பற்றப்படுகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.