மாஸ்கோ

ஷ்யாவில் நடந்த கொரோனா தடுப்பு மருந்து மனித சோதனை வெற்றி அடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது/

உலக அளவில் கொரோனா பாதிப்பில் ரஷ்யா நான்காம் இடத்தில் உள்ளது.   இங்கு இதுவரை 7.27 லட்சம் பேருக்கும் மேல் பாதிக்கப்பட்டு 11.300க்கும் அதிகமானோர் உயிர் இழந்துள்ளனர்.  மற்ற நாடுகளைப் போல் இங்கும் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் அணி தீவிரமாக நடந்து வருகின்றன.

ரஷ்யாவின் மாஸ்கோ பல்கலைக்கழகம் கேலே தொற்று நோய் நுண் உயிரியல் ஆராய்ச்சி மையத்துடன் இணைந்து ஒரு தடுப்பு மருந்தை கண்டுபிடித்துள்ளது.  இந்த மருந்து விலங்குகளுக்கு அளிக்கப்பட்டு சோதனை வெற்றி அடைந்ததையொட்டி கடந்த ஜூன் மாதம் 18 ஆம் தேதி மனிதர்களுக்கு செலுத்தி சோதிக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த முதல் கட்ட சோதனை வெற்றி அடைந்துள்ளதாகவும் இந்த தடுப்பூசி பாதுகாப்பானது என உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.  வரும் 20 ஆம் தேதி அன்று இரண்டாம் கட்ட சோதனை தொடர உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.