டில்லி

ன்னும் 6 மாதங்களில் 3 வயதுக்கு மேற்பட்ட சிறாருக்கு கொரோனா தடுப்பூசி அறிமுகம் செய்யப்பட உள்ளது.

நாடெங்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.   முதலில் முன் களப்பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது.   அதன் பிறகு 60 வயதுக்கு மேற்பட்டோருக்கும் 45 முதல் 60 வயதுடன் இணை நோய் உள்ளவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

அதன் பிறகு அந்த பணி  45 வயதைத் தாண்டிய அனைவருக்கும் போடலாம் என நீட்டிக்கப்பட்டு தற்போது 18 வயதை தாண்டிய அனைவருக்கும் கொரோனா தடுப்பூசிகள் போடப்படுகின்றன.  விரைவில் மூன்றாம் அலை கொரோனா தாக்குதல் இருக்கும் எனவும் அதில் சிறார்கள் அதிகம் பாதிக்கப்படலாம் எனவும் மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இதையொட்டி அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் சிறார்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் நடந்து வருகின்றன.  இன்று நடந்த ஒரு மாநாட்டில் சீரம் இன்ஸ்டிடியூட் தலைமை செயல் அதிகாரி அதார் புனே வாலா இன்னும் 6 மாதங்களில் இந்தியாவில் 3 வயதுக்கு மேற்பட்டோருக்கான கொரோனா தடுப்பூசி அறிமுகம் செய்யப்பட உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.