வாஷிங்டன்

கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 84,515 உயர்ந்து 20,82,372 ஆகி இதுவரை 1,34,560 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை  84,515 பேர் அதிகரித்து மொத்தம்20,82,372 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 7060 அதிகரித்து மொத்தம் 1,34,560 பேர் உயிர் இழந்துள்ளனர்.  5,66,859 பேர் இதுவரை குணம் அடைந்துள்ளனர்.  51,160  பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

நேற்றும் பாதிக்கப்பட்டோர் மற்றும் உயிர் இழந்தோர் எண்ணிக்கை அமெரிக்காவில் அதிக அளவில் உள்ளது.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை  30,206 பேர் அதிகரித்து மொத்தம் 6,44,089 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 2482 அதிகரித்து மொத்தம் 30,206 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 48,701  பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 13,487 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

ஸ்பெயினில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை  6599 பேர் அதிகரித்து மொத்தம் 1,80,659 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 557 அதிகரித்து மொத்தம் 18,812 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 70,853 பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 7371  பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

இத்தாலியில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை  2543 பேர் அதிகரித்து மொத்தம் 165,155 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 578 அதிகரித்து மொத்தம் 21,645 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 38,092 பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 3079 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

பிரான்சில் நேற்று 138 பேர் உயிரிழந்து மொத்த எண்ணிக்கை 17,167 ஆகி உள்ளது.  இங்கு நேற்று 4560 பேர் பாதிக்கப்பட்டு மொத்தம் 1,47,863 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 883 பேர் அதிகரித்து மொத்தம் 12,370 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 29 அதிகரித்து மொத்தம் 422  பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 1608 பேர் குணம் அடைந்துள்ளனர்.