உலக சுகாதார அமைப்புக்கு நிதி நிறுத்தம் : டிரம்புக்கு பில்கேட்ஸ் கண்டனம்

Must read

வாஷிங்டன்

கொரோனா குறித்த விவரங்களைத் தெரிவிக்காததால் அமெரிக்க அதிபர் டிரம்ப் உலக சுகாதார அமைப்புக்கு நிதியை நிறுத்தியதற்கு பில் கேட்ஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில், கொரோனா வைரஸ் பாதிப்புக்குக் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,407 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 லட்சத்தைத் தாண்டியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மொத்தம் 26,047 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செய்தியாளர்களிடம், ” உலக சுகாதார அமைப்பு உலக நாடுகளுக்கு உரிய நேரத்தில் சுகாதார அவசர நிலையை அறிவிக்கத் தவறிவிட்டது.  கொரோனா வைரஸ் பரவலைத் தவறாக நிர்வகித்த உலக சுகாதார அமைப்பின் பங்கை மதிப்பிடுவதற்கு ஒரு ஆய்வு நடத்தப்படும்.

கொரோனா வைரஸ் பரவல் குறித்த தவறான தகவலையும், அதைத் தடுப்பது குறித்துச் சரியான நடவடிக்கைகளைக் கையாளத் தெரியாமல் இருந்ததால் உலக சுகாதார அமைப்புக்கு அமெரிக்கா சார்பில் வழங்கும் நிதியை நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளேன்  அனைவருக்கும் உலக சுகாதார அமைப்பில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது தெரியும்.

உலக சுகாதார அமைப்பு நடுநிலையாகச் செயல்பட்டு அனைத்து நாடுகளுக்கும் ஆலோசனை தெரிவிக்க வேண்டிய நிலையில் கொரோனா வைரஸ் விவகாரத்தில் சீனாவுக்கு ஆதரவாகச் செயல்பட்டது” என்று குற்றம்சாட்டினார்.

மைக்ரோ சாஃப்ட் நிறுவனரும் உலக செல்வந்தர்களில் ஒருவருமான பில் கேட்ஸ், “கொரோனாவால் உலகளவில் ஒரு சுகாதார அவசரநிலை நிலவும் போது, உலக சுகாதார அமைப்பிற்கு நிதியை நிறுத்துவது என்பது மிக ஆபத்தானது. அந்த அமைப்பினர் செய்யும் பணியால்தான் கொரோனா வைரஸ் பரவல் மெதுவாக உள்ளது.

உலக சுகாதார அமைப்பினரின் பணிகளை நிறுத்தினால் வேறு எந்த அமைப்பாலும் அவர்கள் செய்ததைச் செய்ய முடியாது. உலக சுகாதார அமைப்பின் தேவை எப்போதையும் விட இப்போது அதிகமாக இருக்கிறது,” என்று தனது டிவிட்டரில் பதிந்துள்ளார்.

More articles

1 COMMENT

Comments are closed.

Latest article