சென்னை:
செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், விழுப்புரம் உள்பட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு விவரம் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,38,470 ஆக உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களாக சென்னை மட்டுமின்றி மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.
செங்கல்பட்டு மாவட்டம்
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மேலும் 143 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 8,426ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனாவால் 165 பேர் உயிரிழந்துள்ளனர் தற்போதைய நிலையில், 3589 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 4528 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று மேலும் 144 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,123 ஆக உயர்ந்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம்
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் மேலும் 310 பேருக்கு புதிதாக பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7240 ஆக உயர்ந்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம்
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் 123 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,602 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 19 பேர் பலியாகி உள்ள நிலையில், 590 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 993 பேர் நோயில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மதுரை மாவட்டம்
மதுரை மாவட்டத்தில் இன்று மேலும் 310 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6,849-ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலையில் 3803 சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 2616 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 120 பேர் உயிரிழந்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம்
விருதுநகர் மாவட்டத்தில் இன்று மேலும் 141 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,492 ஆக அதிகரித்து உள்ளது. இதுவரை கொரேனாவால் 17 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 983 பேர் தொற்றில் இருந்து விடுதலையாகி உள்ள நிலையில், 1492 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம்
நாமக்கல் மாவட்டத்தில் மேலும் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு 200ஆக உயர்ந்துள்ளது.