பெங்களூரு

பெங்களூரு நகரில் அடுக்குமாடி குடியிருப்புகளில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.

கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவில் அதிக அளவில் அடுக்குமாடிக் குடியிருப்புக்கள் உள்ளன.   தற்போது கர்நாடக மாநிலத்தில் கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளதால் வெளி மாநிலத்தைச் சேர்ந்த பலர் கர்நாடக மாநிலத்து வருகின்றனர்.   இதையொட்டி நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு வந்து செல்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இவ்வாறு வந்து செல்வோர் கொரோனா விதிமுறைகளை மீறுவதால் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது.   இது குறித்து பெங்களூரு மாநகராட்சி அதிகாரிகள், “சில அடுக்குமாடிக் குடியிருப்புகளில் மீண்டும் கொரோனா பரவுவதால், தொற்று அதிகமானோர் வசிக்கும் பிளாட்டுகள், ‘மைக்ரோ கன்டெய்ன்மென்ட்’ மண்டலமாக அடையாளம் காணப்படும்.

மேலும் கொரோனா நோயாளிகளைப் பரிசோதித்து, வீட்டில் தனிமைப்படுத்தப்படுவர். கொரோனா பரிசோதனை அதிகரிக்கப்படும்.  அத்துடன் வெளி மாவட்டம், மாநிலங்களிலிருந்து வருவோர் கண்காணிக்கப்படுகின்றனர். அடுக்குமாடி குடியிருப்பு சங்கத்துக்கு மக்கள் கூட்டம் சேராமல், பார்த்துக்கொள்ளும்படி, உத்தரவிட்டுள்ளோம்.

கர்நாடக பாஜக அரசு பெங்களூருவில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை துரிதப்படுத்தப்படவில்லை என்பதால் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் கோவிட் பரவல் அதிகரித்துள்ளதாகப் புகார் எழுந்துள்ளது. ஆனால் பெங்களூருவில் 60 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாகக் கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.