கொரோனா பரவல் தீவிரம் அடைந்துள்ளதால், மலேசியாவில் ஊரடங்கு மே 12 வரை நீடிப்பு செய்யப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்து உள்ளது. இதற்கான அறிவிப்பை மலேசிய பிரதமர் மொகிதின் யாசின் அறிவித்தார்.
மலேசியாவில் கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில் கடந்த மார்ச் மாதம் 18ந்தேதி முதல் ஏப்ரல் 28ந்தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கு இன்னும்சில நாட்கடிளில் முடிவடைய உள்ளது.
ஆனால், மலேசியாவில் சமீப நாட்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதையடுத்து, பிரதமர் மொகிதின் யாசின் வியாழக்கிழமை இரவு 8 மணிக்கு தொலைக்காட்சியில் உரையாற்றி னார்.
முன்னதாக கடந்த 22ந்தேதி அன்று ஒரே நாளில் புதிதாக 71 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியான நிலையில், தொற்றை தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக ஊரடங்கு மேலும் இரு வாரங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக பிரதமர் மொகிதின் யாசின் அறிவித்துள்ளார்.
மலேசிய நாட்டில் இன்றுவரை 5,691 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை 96 பேர் உயிரிழந்துள்ள நிலையில், குணமானோர் எண்ணிக்கை 3663 ஆக உயர்ந்துள்ளது.