சேலம்:
தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமாகி வருகிறது. சேலம் மாவட்டத்திலும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், அங்கு இன்று மதியம் 1 மணி முதல் 2 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப் பட்டு உள்ளது. மாநில ஆட்சித்தலைவர் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளார்.
நாடு முழுவதும் கொரேனா பரவலை தடுக்கவே மே 3ந்தேதிவரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஆனால், தமிழகத்தில் மக்கள் பல இடங்களில் ஊரடங்கை மதிக்காமல் சுற்றித்திரிவதால், கொரோனா பரவல் தீவிரமாகி வருகிறது.
அதிகப்பட்சமாக சென்னையில் 400 பேருக்கு கொரோனா பரவி உள்ளது. சேலத்திலும், நேற்று ஒரேநாளில் புதியதாக 5 பேருக்கு கரோனா தொற்று உறுதியான நிலையில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது.
இதையடுத்து கொரோனா பரவலை கட்டுப்பத்தும் வகையில், இன்று மதியம் 1 மணி முதல் 2 நாள்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் ராமன் அறிவித்து உள்ளார்.
இந்த முழு ஊரடங்கின்போது, மருத்துவமனை, மருந்தகங்கள் போன்றவை மட்டுமே 2 நாள்களுக்கு இயங்கும் என்றும், நடமாடும் வாகனங்கள் மூலமாக காய்கறிகள் விற்கப்படும் என்றும் அறிவித்து உள்ளர்.
ஊரடங்கை மீறி வீட்டை விட்டு வெளியே வருவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.