சென்னை: சில மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு 20 என்ற அளவில் கூடியுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார்.
இன்று செய்தியளார்களிடம் பேசிய அமைச்சர், ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது. தினசரி 1.6 லட்சம் என்ற அளவில் கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.
சில மாவட்டங்களில் தொற்று பரவல் 20 என்ற அளவில் கூடியிருப்பதாக ஒப்புக்கொண்டவர், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தடுப்பூசி முகாம் நடத்த ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது என்றார்.
மேலும், கடந்த அதிமுக ஆட்சியில் நாள் ஒன்றுக்கு 61ஆயிரம் தடுப்பூசிகள் மட்டுமே போடப்பட்டு இருப்பதாக கூறியவர், தற்போது 1.34 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.
10ஆண்டு காலம் ஆட்சியில் இருந்த அதிமுக அரசு, செங்கல்பட்டு ஆலையில் தடுப்பூசி தயாரிக்க எந்தவொரு நடவடிக்கை யும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினார்.
தளர்வுகளைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் 17 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு…