சென்னை: கொரோனா பரவல் காரணமாக  சென்னை அசோக் நகர் எல்.ஜி.ஜி.எஸ் காலனி தனிமை படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் கட்டுக்குள் இருந்த கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. அத்துடன் பிறழ்வு தொற்றான ஒமிக்ரானும் அதிகரித்து வருகிறது. மாநிலம் முழுவதும் இதுவரை 27,45,261 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ள நிலையில், 43 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதியாகி உள்ளது.

கொரோனா பாதிப்பு மற்றும் ஒமிக்ரான் தொற்று பாதிப்பில் தலைநகர் சென்னை முதலிடத்தில் உள்ளது. சென்னையில்  நேற்று  1194  பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 5,61,709 ஆக உயர்ந்துள்ளது. தற்போது சென்னையில் மட்டும்  1519 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதுபோல, சென்னையில் ஒமிக்ரான் பாதிப்பும்  31 ஆக உள்ளது. இவர்களில் 22 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 9 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இந்தநிலையில், சென்னை அசோக் நகர், எல்.ஜி.ஜி.எஸ் காலனி 19வது தெருவில் உள்ள இரண்டு வீட்டில் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, அந்த பகுதி கொரோனா   தனிமை படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது