டில்லி
காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி வரும் வெள்ளிக்கிழமை கொரோனா குறித்து ஆலோசிக்க எதிர்க்கட்சி கூட்டத்தை நடத்த உள்ளார்.
கொரோனா பாதிப்பு நாடெங்கும் அதிகரித்து வருகிறது.
இதுவரை 1,02,586 பேருக்குப் பாதிப்பு ஏற்பட்டுஅத்ல் 3176 பேர் உயிர் இழந்துள்ளனர்.
பாதிப்படைந்தோரில் 39968 பேர் குணமடைந்துள்ளனர்.
கொரோனாவை தடுக்க அமலாக்கப்பட்ட ஊரடங்கு இதுவரை மூன்று முறை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஆலோசிக்க காங்கிரஸ் கட்சித் தலைவர் காணொளி காட்சி மூலம் வெள்ளிக்கிழமை எதிர்க்கட்சிகள் கூட்டம் ஒன்றை நடத்த உள்ளார்.
இதற்காக அவர் ஒத்த கருத்துள்ள எதிர்க்கட்சி தலைவர்களை அழைத்துள்ளார்.
மம்தா பானர்ஜி, உத்தவ் தாக்கரே, முக ஸ்டாலின், சரத பவர், ஹேமந்த சோரன் உள்ளிடட பல தலைவர்கள் அழைக்கபட்டுள்ளனர்.