மும்பை: மராட்டிய மாநிலத்தில் 100% தனித்திருக்குமாறு சுகாதாரத் துறையால் அறிவுறுத்தப்பட்டவர்களை அடையாளம் காண, சம்பந்தப்பட்டவர்களின் இடது கையில் முத்திரைக் குத்துவதற்கு உத்தரவிட்டுள்ளது அம்மாநில அரசு.
இதன்மூலம், அத்தகைய நபர்கள் உத்தரவை மீறி வீட்டைவிட்டு வெளியே வரும்போது, அவர்களை, பிறரால் அடையாளம் காண முடியும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், ஐரோப்பிய யூனியன், துருக்கி மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியா வருகைதரும் பயணிகள், மார்ச் 18ம் தேதி முதல் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், இந்த முடிவு மீண்டும் மறுஆய்வு செய்யப்படும் என்று மத்திய சுகாதார அமைச்சகத்தின் இணைச் செயலாளர் லாவ் அகர்வால் கூறியுள்ளார்.