பம்பா: சபரிமலை அய்யப்பன் கோவில் மேல்சாந்தியின் 3 உதவியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், மேல்சாந்தி உள்பட 7பேர் தனிமைப்படுத்தி கொண்டனர்.

சபரிமலை கோவில், மண்டல பூஜைகளுக்காக நவம்பர் மாதம் 15 ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து 41 நாட்கள் மண்டல பூஜை வழிபாடு நடந்தது. இநத் சமயத்தில், கொரோனா கட்டுப்பாடுகளுடன் குறைந்த அளவில் ஆன்லைன் மூலம் பதிவு செய்துள்ள பக்தர்கள் மட்டும் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். அதையடுத்து, கடந்த 26ந்தேதி (டிசம்பர்) நடை சாத்தப்பட்டது.
அதையடுத்து, மகரவிளக்கு பூஜைகாக நேற்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. முன்னதாக ஊழியர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் சபரிமலை மேல்சாந்தி ஜெயராஜின் உதவியாளர்கள் 3 பேருக்கு நேற்று கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மேல்சாந்தி உட்பட 7 பேர் தங்களை தானாகவே தனிமைப்படுத்திக் கொண்டனர்.
கோயில் நடையைத் திறந்த தந்திரி கண்டரர் ராஜீவரர், இன்று முதல் சிறப்பு பூஜைகளையும் நடத்துவார் என அறிவிக்கப்பட்ட உள்ளது. அதற்கான முன்பதிவுகள் தொடங்கி உள்ளது. ஜனவரி 19 வரை பக்தர்கள தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட உள்ளனர். அதன் பிறகு 20 ஆம் தேதி பந்தள ராஜ குடும்ப பிரதிநிதி தரிசனம் பெற்ற பிறகு கோவில் நடை அடைக்கப்பட உள்ளது.
[youtube-feed feed=1]