சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத அளவில் உச்சம்பெற்றுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 8,449 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதுடன், ஒரே நாளில் 33 பேர் உயிரிழந்துள்ளனர். இது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
நாடு முழுவதும் கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருகிறது. இதன் பாதிப்பு அடுத்த 2 வாரங்களுக்கு தீவிரமாக இருக்கும் என சுகாதாரத்துறையினரும், மருத்துவ நிபுணர்களும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 8,449 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதே வேளையில் 4,920 பேர் தொற்றில் இருந்து விடுபட்டுள்ளனர். கோவிட்-19 தொற்று கொண்டவர்களில் இதுவரை 92.32% குணமடைந்துள்ளனர்.
இன்று மட்டும் 33 பெர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை கோவிட்-19-னால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13,032*
அதிகபட்சமாக சென்னையில் இன்று 2636 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தின் பிற மாவட்டங்களில் புதிதாக 5,783 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில் மாநிலம் முழுவதும் 61500 பேர் சிகிச்சையில் உள்ளனர்!
வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து இன்று தமிழகம் வந்த 30 பேருக்கு கோவிட்-19 தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளதுழ.
தமிழகத்தில் உள்ள மொத்த கோவிட்-19 பரிசோதனை நிலையங்கள் 263 (69 அரசு + 194 தனியார்)