சென்னை

கொரோனா நோயாளிகள்  ஆக்சிஜன் அளவு 92க்கு குறைந்தால் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார்கள் என தமிழக அமைச்சர் மா சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா அதிகரித்து வருகிறது.   நேற்று ஒரே நாளில் 15,379 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.   தமிழக அரசு லேசான அறிகுறி உள்ளவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது.    கொரோனா உறுதி ஆனவர்கள் இல்லத்தில் உள்ள 60 வயதைத் தாண்டியோர் அவசியம் பரிசோதனை செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று தமிழக சுகாதார அமைச்சர் மா சுப்ரமணியன் திருவான்மியூரில் வீட்டு தனிமையில் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு நேரில் சென்று பல்ஸ் ஆக்சிமீட்டர் கருவியை வழங்கினார். அவர் செய்தியாளர்களிடம், “கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 21 ஆயிரத்து 987 பேர்  அவர்களின் வீடுகளிலே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அவர்களை கண்காணிக்கும் வகையில் 15 மண்டலங்களிலும் மருத்துவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் என 178 பேர்  பொதுமக்களிடம் தொலைபேசி மூலம் ஆலோசனைகளை வழங்கி வருகிறார்கள். தவிர ஒரு வட்டத்திற்கு 5 பேர் வீதம் தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டு 1000 தன்னார்வலர்கள் களப்பணி ஆற்றி வருகிறார்கள்.

சென்னை திருவான்மியூர் அடுக்கு மாடி குடியிருப்பில் 10க்கும் மேற்பட்டவர்களுக்குத் தொற்று இருந்த நிலையில்அவர்களின் குடும்பத்திற்கு 1 பல்ஸ் ஆக்ஸி மீட்டர் வழங்கப்பட்டதுஆக்சிஜன்  அளவு 92க்கு கீழே வரும் பட்சத்தில் மட்டுமேமருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும்.  92க்கு மேல் இருப்பவர்கள் வீடுகளிலே  தனிமைப்படுத்திக் கொண்டால் போதும்”  எனத்  தெரிவித்துள்ளார்.