எர்ணாகுளம்
கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மருத்துவமனையில் திருமணம் நடந்துள்ளது.
கேரளாவை சேர்ந்த ஃபாயிஸா என்னும் பெண்ணுக்குத் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
எனவே அவர் எர்ணாகுளத்தில் உள்ள மட்டன்சேரி கொரோனா சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டார்.
அவருடைய திருமணம் மருத்துவமனையிலேயே நடந்துள்ளது.
இஸ்லாமிய வழக்கப்படி திருமணத்தின் போது மணமகனும் மணமகளும் பார்த்துக் கொள்ளக் கூடாது
மணமகன் இஸ்லாமிய வழக்கப்படி அருகில் இருந்த மசூதியில் நடந்த திருமண விழாவில் கலந்து கொண்டார்.
மருத்துவமனையில் இருந்த சக நோயாளிகள் மணமகளுடன் திருமண விழாவை ஆட்டம் விருந்துடன் நடத்தி உள்ளனர்
இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
நமது வாசகர்களுக்காக இதோ அந்த வீடியோ
[youtube https://www.youtube.com/watch?v=2EmwActBfGc]