ராஜராஜேஸ்வரி நகர், கர்நாடகா,
இன்று கர்நாடகா ராஜராஜேஸ்வரி நகர் சட்டப்பேரவை தொகுதி இடைத் தேர்தலில் கொரோனா நோயாளி ஒருவர் வாக்களித்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் இன்று ராஜராஜேஸ்வரி நகர் மற்றும் சிரா சட்டப்பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தல் நடந்தது.
இதில் ஆர் ஆர் நகர் என அழைக்கப்படும் ராஜராஜேஸ்வரி நகர் தொகுதியில் 39.15% வாக்குகளும் சிரா தொகுதியில் 77.34% வாக்குகளும் பதிவாகி உள்ளன.
இதில் ஆர் ஆர் நகரில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் கொரோனா நோயாளி ஒருவர் வாக்களித்துள்ளார்.
இவருக்காக தனி ஆம்புலன்ஸ் வசதி அளிக்கப்பட்டது.
அவர் வாக்களித்த பிறகு அந்த வாக்குச்சாவடி கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டு பிறகு மற்றவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.