பெங்களூரு : கர்நாடக மாநிலத்தில், கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில், சுமார் 7 மாதங்களுக்கு பிறகு இன்று கல்லூரிகள் திறக்கப்பட்டன.
கொரோனா தொற்று பரவல் பொமுடக்கத்தில் அறிவிக்கப்பட்ட தளர்வுகள் காரணமாக பல மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு உள்ளன. அதன்படி கர்நாடக மாநிலத்திலும், முதல்கட்டகமா இன்று முதல் கல்லூரிகள் திறக்க உத்தரவிடப்பட்டது,. அதன்படி, கல்லூரிக்கு வரும் மாணவர்கள் கோவிட்-19 பரிசோதனை செய்து, அதன் சான்றிதழ் கொண்டுவர வேண்டும் என்று உயர்கல்வி அமைச்சகம் உத்தரவிட்டது.
வகுப்புக்கு நேரடியாக வர விருப்பம் இல்லாத மாணவர்கள் ஆன்லைன் மூலமாக கற்க அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. கல்லூ ரிக்கு வரும் மாணவர்கள் மற்றும்ஆசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனை சான்றிதழ் கட்டாய மாக்கப்பட்டுள்ளது.
‘இளங்கலை படிப்பான பி.ஏ., பி.காம்., பி.எஸ்.சி. வகுப்புகள் பின்னர் தொடங்கும் என்றும் முதல்கட்டகமாக முதுநிலை கல்லூரி படிப்புகளுக்கு மட்டுமே இன்று வகுப்புகள் தொடங்கப்பட்டன. அதுபோல விடுதி மாணவர்களுக்கா மாணவர்கள் விடுதிகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விடுதிக்கு வரும் மாணவர்கள், கோவிட்-19 பரிசோதனை செய்து கொண்டதற்கான ஆவணங்கள் கொண்டுவர வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.
அதன்படி, கர்நாடகாவில் பட்டப்படிப்பு மற்றும் பட்டமேற்படிப்புக்கான கல்லூரிகள் இன்று திறக்கப்பட்டன. பெற்றோரின் ஒப்புதல் கடிதத்துடன், கொரோனா நெகடிவ் சான்றிதழ் கொண்டு வந்த மாணாக்கர்கள் மட்டுமே வகுப்பறைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.