லண்டன்: பிரிட்டன் அரசி இரண்டாம் எலிசபெத் மற்றும் அவரின் குடும்பத்தினர், கொரோனா பரவல் காரணமாக, தங்கள் வருவாயில் 35 மில்லியன் பவுண்டுகள் இழப்பை சந்தித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரிட்டனின் அரண்மனை உள்ளிட்ட அரசக் குடும்பத்தினருக்கு சொந்தமான இடங்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்ததையடுத்தே இந்த இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக, பொது வருமானத்திலிருந்து அரச குடும்ப செலவினங்களுக்கு நிதி ஒதுக்குதல் தொடர்பான விவகாரங்களை கவனிக்கும் பொறுப்பாளர் மைக்கேல் ஸ்டீவன்ஸ் கூறியதாவது, “கடந்த 3 ஆண்டுகளில், அரச குடும்பத்தின் மாளிகைகளுக்கு வருகைதரும் நபர்களின் எண்ணிக்கை குறைந்ததால், பொது நிதியத்தில் 15 மில்லியன் பவுண்டுகள் குறைந்தது.

மேலும், கொரோனா பரவலால், கடந்த 10 ஆண்டுகளில், தற்போது 20 மில்லியன் பவுண்டுகள் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், பக்கிங்ஹாம் அரண்மனையில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருக்கும் 369 மில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான மராமத்துப் பணிகள் பாதிக்கும் நிலை உள்ளது” என்று அவர் தெரிவித்தார்.