சென்னை: சென்னையில் அடுத்த 3 நாட்களில் மேலும் 400 காய்ச்சல் முகாம்கள், வீடு தேடிவரும் தன்னார்வலர்களிடம் தயக்கம் இல்லாமல் தொற்று அறிகுறி இருந்தால் கூறுங்கள் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.‘லேசான அறிகுறிகள் இருந்தாலே உடனடியாக கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது என்றும் தெரிவித்தார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், “சென்னை மாநகராட்சியின் இரண்டு மண்டலங்களில் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டி உள்ளது . லேசான அறிகுறிகள் இருந்தாலே உடனடியாக கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
காய்ச்சல், தலைவலி அறிகுறிகள் இருப்பவர்கள் உடனடியாக மருத்துவமனையை அணுக வேண்டும். எவ்வித அறிகுறிகளும் இன்றி கொரோனா தொற்று பரவி வருகிறது. . ரத்தத்தின் ஆக்ஸிஜன் அளவை பரிசோதிப்பதன் மூலம் கொரோனா தொற்றை கண்டறியலாம் என தெரிவித்துள்ளார். லேசான அறிகுறிகள் இருந்தாலே உடனடியாக கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது என கூறினார்.
நாட்டில் கொரோனா 2ம் அலை வேகமாக பரவுகிறது. குறிப்பாக சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு வீடுகளுக்கும் நேரடியாக சென்று ஆய்வு செய்கிறோம். மாஸ்க் அணியாததால்தான் கொரோனா அதிகரிப்பதால் சென்னை மக்கள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்.
வீடுகள்தோறும் சென்று பரிசோதனை நடத்தப்படுகிறது. வீடு தேடிவரும் தன்னார்வலர்களிடம் தயக்கம் இல்லாமல் தொற்று அறிகுறி இருந்தால் தெரிவிக்கவும். மருத்துவமனைகள் மட்டுமின்றி 12 மண்டலங்களில் ஸ்கிரீனிங் சென்டர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தற்போது 50 மருத்துவ முகாம்களை 8000 முகாம்களாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த மூன்று நாட்களுக்குள் சென்னையில் 400 காய்ச்சல் முகாம்களை அமைக்கிறோம்.
தண்டையார்பேட்டை யில் 1, 666 , தண்டையார்பேட்டை 1,260, ராயபுரம் 1,698, திருவிக நகரில் 1,529, அம்பத்தூர் 1,314, கோடம்பாக்கம் 1,708 ,வளசரவாக்கம் 1,036, அடையாறு 1,155, திருவெற்றியூர் 462 ,மணலி 194 ,மாதவரம் 716 ,ஆலந்தூர் 849 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. பெருங்குடி மண்டலத்தில் 929 சோழிங்கநல்லூர் மண்டலத்தில் 443 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதுவரை 10 லட்சம் பேர் எடுத்துக்கொண்டுள்ளதால் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள தயக்க வேண்டாம். இன்னும் 15 லட்சம் கொரோனா தடுப்பூசி உள்ளதால் தடுப்பூசி போடுவோர் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.
சென்னையில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 1199 ஆக அதிகரித்துள்ளதாக சகூறியவர், குறிப்பிட்ட குடியிருப்பு அல்லது தெருவில் 3 பேருக்கு மேல் தொற்றால் பாதிக்கப்பட்டால் அந்த இடம் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்படுகிறது என்றார்.
இன்னும் 15 லட்சம் கொரோனா தடுப்பூசி உள்ளதால், தடுப்பூசி போடுவோரின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. எந்தவித அறிகுறியும் இல்லாமலும் கொரோனா வைரஸ் தொற்று பரவுகிறது. சென்னையில் 12 ஆயிரம் தன்னார்வலர்கள் தடுப்பூசி விழிப்புணர்வு கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.45 வயதிற்கு மேற்பட்டோர் தயக்கமில்லாமல் பயமில்லாமல் கொரோனா தடுப்பூசி செலுத்த முன் வரவேண்டும்”.
இவ்வாறு அவர் கூறினார்.