சென்னை

சென்னை நகரின் இதயப் பகுதியான நுங்கம்பாக்கத்தில் உள்ள காவல் நிலையம் கொரோனா பாதிப்பால் மூடப்பட்டுள்ளது.

சென்னையில் வேகமாகப் பரவி வரும் கொரோனா பாதிப்பு மக்களை கடும் பீதியில் ஆழ்த்தி உள்ளது.   இன்று தமிழகத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை கிடுகிடு என 121 ஆக உயர்ந்துள்ளது.  இதில் சென்னை நகரில் மட்டும் 103 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  நேற்று பாதிக்கப்பட்டவர்களில் சென்னை நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் பணி புரியும் ஒரு காவலர் மற்றும் ஒரு எழுத்தர் உள்ளனர்.

அவர்கள் இருவரும் தற்போது சென்னை ராஜிவ் காந்தி பொது மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.   இந்த எழுத்தர் சென்னை திருவல்லிக்கேணியில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.  அவருடைய குடும்பத்தினருக்கும் சோதனை நடந்துள்ளது

கொரோனா பாதிக்கபப்ட்டுள்ள காவலர் கொரோனாவால்  மறைந்த மருத்துவர் சைமனின் உடலுடன் கீழ்ப்பாக்கம் கல்லறைக்குச் சென்றவர்களில் ஒருவர் ஆவர்.   இவரும் எழுத்தரும் நெருங்கிய நண்பர்கள் ஆவார்கள்.   இவர்கள் இருவரும் கொரோனா உறுதி செய்யும் வரை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் பணி புரிந்து வந்தனர்.

எனவே தற்போது காவல் நிலையம் மூடப்பட்டுள்ளது.  இந்த காவல் நிலைய கட்டிடம் மற்றும் அருகில் உள்ள அதிகாரிகள் இல்லம் ஆகியவை கிருமி நாசினிகளைக் கொண்டு சுத்தம் செய்யப்படுகிறது.   மேலும் இங்குப் பணி புரியும் அனைவருக்கும் பரிசோதனை நடந்துள்ளது.   இந்த பரிசோதனை முடிவுக்கு பிறகே காவ்ல நிலையம் திறக்கப்படும் என அதிகாரப்பூர்வமற்ற செய்திகள் தெரிவிக்கின்றன.