டில்லி

வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களில் 3336 பேர் கொரோனாவால் பாதிக்கப்ப்டதாகவும் அதில் 25 பேர் உயிர் இழந்ததாகவும் அரசு தெரிவித்துள்ளது.

உலகெங்கும் கொரோனா தொற்று மிக வேகமாகப் பரவி வருகிறது.  இன்றுவரை சுமார் 21 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  சுமார்1.36 லட்சம் பேருக்கும் அதிகமானோர் மரணம் அடைந்துள்ளனர்.  இன்று மட்டும் பாதிப்பு அடைந்தோர்  சுமார் 25000க்கும் அதிகமாக  அதிகரித்து இன்று  2400க்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் இன்று 389 பேர் பாதிப்புக்குள்ளாகி மொத்த எண்ணிக்கை 12759 ஆகி உள்ளது.   இன்று வரை 423 பேர் இந்தியாவில் மரணம் அடைந்துள்ளனர்.  வெளிநாடுகளில் ஏராளமான இந்தியர்கள் வசித்து வருகின்றனர்.  இவர்களை இந்தியாவுக்கு அழைத்து வரக் கோரி அளிக்கப்பட்ட மனுவுக்கு உச்ச நீதிமன்றம் அவர்கள் தற்போது இந்தியா வருவது அவர்களுக்கும் நாட்டுக்கும் பாதுகாப்பானது இல்லை எனக் கூறியது

மத்திய அரசு அதிகாரி ஒருவர்,  ”இந்தியாவில் 48 நாடுகளை சேர்ந்த சுமார் 35000 வெளிநாட்டினர் இந்தியாவில் இருந்து கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் அவரவர் நாடுகளுக்கு அனுப்பப் பட்டுள்ளனர். பல இந்தியர்கள் வெளிநாடுகளில் வசித்து வருகின்றனர். அவர்களில் 3336 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  வெளிநாடுகளில் கொரோனாவால் 25 இந்தியர்கள் மரணம் அடைந்துள்ளனர்”  எனத் தெரிவித்துள்ளார்.