பீஜிங்

கொரோனாவின் ஊற்றுக் கண் எனக் கூறப்படும் சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழப்பு ஏதும் நிகழவில்லை.

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்று தற்போது 205க்கும் அதிகமாக உலக நாடுகளில் பரவி உள்ளது.   இதுவரை கொரோனாவால் 13.46 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  அத்துடன் 74000க்கும் மேற்பட்டவர்கள் உயிர் இழந்துள்ளனர்.   சுமார் 2.13 அட்சம் பேர் குணம் அடைந்துள்ளனர்.

தற்போது உலக அளவில் அமெரிக்காவில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  இங்கு சுமார் 3.67 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இறப்பு எண்ணிக்கை 10,876 ஆகும்.  இத்தாலியில் 16,623 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  உலக அளவில் இது மிக மிக அதிகமாகும்.  அடுத்ததாக ஸ்பெயினில் 13,341 பேர் உயிர் இழந்துள்ளனர்.

சீனாவில் கடந்த 24 மணி நேரமாக யாரும் உயிர் இழக்கவில்லை.  இது மக்கள் மனதில் சற்று நிம்மதியை அளித்துள்ளது.  இதுவரை சீனாவில்  81740 பேர் பாதிக்கப்பட்டு அதில் 3331 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  77,167 பேர் முழுவதுமாக குணம் அடைந்துள்ளனர்.   கொரோனாவின் ஊற்றுக் கண் எனக் கூறப்படும் வுகான் நகரில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர்.