கொரோனா விஷயத்தில்’.. ட்ரம்பை தொடரும் நிதின் கட்காரி..
உலகை காலி செய்து வரும் கொரோனா வைரஸுக்கு இன்னும் மருந்து கண்டு பிடிக்கவில்லை.
இது குறித்துக் கவலைப்படாத அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ‘கொரோனா எங்கிருந்து வந்திருக்கும் ?’’ என்ற ஆராய்ச்சியிலேயே முழு நேரமும் ஈடுபட்டிருந்தார்.
‘’சீனாதான் அந்த வைரசை உருவாக்கி உலகுக்கு சப்ளை செய்தது’’ என்ற ரீதியில்,ஆரம்பத்தில் கருத்து தெரிவித்த ட்ரம்ப், கொஞ்ச நாட்களாக இது குறித்து வாய் திறப்பதில்லை.
ட்ரம்ப் சொல்லிய கருத்தை நமது மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின்.கட்காரி வழி மொழிந்துள்ளார்.
ஆமாம்.
‘’கொரோனா ‘ லேபரட்டரியில் ( ரசாயன கூடம்) தான் செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ளது’’ என்று கூறி அதிர வைத்துள்ளார், அவர்.
என்,டி.டி.வி.க்கு நிதின் கட்காரி அளித்துள்ள பேட்டியில்’’ கொரோனா வைரஸ் இயற்கையாகத் தோன்றியது அல்ல. அது- செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ளது.’’ என்று கருத்து தெரிவித்து அதிர வைத்துள்ளார் .
‘’பல நாடுகள் அந்த வைரசுக்கு மருந்து கண்டு பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. ஆனால் இன்னும் மருந்து கண்டு பிடிக்கவில்லை. விரைவில் மருந்து கண்டு பிடித்து விடுவார்கள். அப்போது பிரச்சினை இருக்காது’’ என்றும் கூறியுள்ளார், நிதின்.
’’ நாம் ஏழை நாடு, கொரோனாவை எதிர்த்துப் போராட வேண்டும், அதுபோல் பொருளாதார வளர்ச்சிக்காகவும் போராட வேண்டும். மாதா மாதம் ஊரடங்கு போட்டுக்கொண்டிருக்க முடியாது ‘’ என்றும் அந்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார், நிதின் கட்காரி
அதாவது-
‘’இனியும் ஊரடங்கு வேண்டாம்’’ என்பது அவர் கருத்து..
– ஏழுமலை வெங்கடேசன்